முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தோட்டத் தொழிலாளர்களின் 1700 ரூபா சம்பளம்: ஜீவன் முன்வைத்துள்ள கோரிக்கை

தோட்டத் தொழிலாளர்களுக்கான 1700 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுக்க ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான்(Jeevan Thondaman) கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம்(19) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
1700 ரூபா சம்பளத்தை வழங்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ள போதும் தோட்டக் கம்பனிகள் இதுவரை அதனை வழங்க மறுத்து வருகின்றன.

1700 ரூபா சம்பளம்

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்றில்லாமல் அனைவரும் இணைந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு அதனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

தோட்டத் தொழிலாளர்களின் 1700 ரூபா சம்பளம்: ஜீவன் முன்வைத்துள்ள கோரிக்கை | 1700 As Salary For Plantation Workers Issue

1700 ரூபா சம்பளம் என்பது எந்த வகையிலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு போதுமானது என நான் கூறவில்லை. என்றாலும் அதையாவது பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தற்போது வழங்கப்படும் ஆயிரம் ரூபா சம்பளம் 2020 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. அது சுமார் ஏழு டொலர்கள் ஆகும். அந்த சம்பளமே இன்றும் வழங்கப்படுவது என்பது எத்தளவு அநீதியாகும்.

பாரிய அநீதி

அதேவேளை, அண்மையில் தோட்டம் ஒன்றில் தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியில் தொழிலாளர்களின் சார்பாக நான் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், சில ஊடகங்கள் அந்த செய்தியை திரிபு படுத்தி வெளியிட்டுள்ளன.

தோட்டத் தொழிலாளர்களின் 1700 ரூபா சம்பளம்: ஜீவன் முன்வைத்துள்ள கோரிக்கை | 1700 As Salary For Plantation Workers Issue

அந்தத் தவறு நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

அதேவேளை, தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தொழிலாளர்களை கைது செய்யும் அதிகாரம் காவல்துறையினருக்கு கிடையாது. அந்த வகையில் தோட்ட முகாமைத்துவம் பாரிய அநீதி இழைத்து வருகிறது” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்