முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாடாளுமன்றத்தில் தமிழ் எம்பிக்களின் கேள்விக்கு பதிலளித்த பிரதமர்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தமிழ் எம்பிக்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) பதிலளித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்று (19.06.2024) இடம்பெற்ற அமர்விலேயே குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

இதன்போது கருத்துரைத்த பிரதமர்,

“இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் என்னுடன் கலந்துரையாடினார்கள். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்து உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. 

எழுப்பப்பட்ட கேள்வி 

கணக்காய்வாளர் தொடர்பிலான பிரச்சினை சம்பந்தமாக அவர் நடவடிக்கை மேற்கொள்வார்.

அது மாத்திரமன்றி, இந்த விடயம் குறித்து உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

எனவே, விரைவில் கல்முனைக்கு சென்று கலந்துரையாடி பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்” என சுட்டிக்காட்டியுள்ளார். 

குறித்த அமர்வில், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan), “கிட்டத்தட்ட இரண்டு மூன்று மாதங்களாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. 

இந்நிலையில், இந்த பிரச்சினை தொடர்பில் பிரதமர் வலியுறுத்தியும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் கவனம் செலுத்தவில்லை. எனவே, பிரதமர் இது குறித்த தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார். 

அதேவேளை, வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் (Selvarajah Kajendren) கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் கேள்வி எழுப்பியதுடன் விரைவில் தீர்வை பெற்று தருமாறு பிரதமரிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.