முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணிலின் நடவடிக்கைக்கு பசில் அதிருப்தி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கூட்டணி அமைக்க தயாராகும் ராஜபக்சக்கள் இல்லாத புதிய அரசியல் கட்சி தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksa) அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுடனான விசேட சந்திப்பின் போதே இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் ராஜபக்சக்கள் இல்லாத மொட்டுக்கட்சியினர் சிலர் கூட்டணி அமைப்பது தொடர்பில் பிரசன்ன ரணதுங்க மற்றும் ரணில் விக்ரமசிங்க இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

அடிபணிய தயாரில்லை

குறித்த கூட்டணி சார்ந்த எந்த ஒரு நிகழ்வுகளிலிலும் ராசபக்சக்களை இணைத்துக் கொள்வதில்லை என பிரசன்ன ரணதுங்க, ரணில் விக்ரமசிங்கவிடம் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.

ரணிலின் நடவடிக்கைக்கு பசில் அதிருப்தி | New Party Formed After Rajapaksas Were Expelled

இந்நிலையில் இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க மற்றும் பசில் ராஜபக்ச இடையிலான சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.

பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட மொட்டுக்கட்சியின் கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் சில அங்கத்தவர்கள் கலந்துகொண்டதாகவும், இந்த செயற்பாடானது திருப்திகரமானதாக அமையவில்லை என பசில் ராஜபக்ச எடுத்துரைத்துள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்பானது அவர் விடுத்த அழைப்பின் பேரிலேயே முன்னெடுக்கப்பட்டதாகவும் ராஜபக்சக்கள் எவருக்கும் அடிபணிய தயாரில்லை எனவும் கடுமையான கருத்துக்களை பசில் இதன் போது முன்வைத்துள்ளார்.

எனினும் மொட்டுக் கட்சியினரையோ, வேறு கட்சியினரையோ இணைத்துக்கொள்வது ஜனாதிபதியின் தனிப்பட்ட அரசியல் முயற்சியாக இருந்தாலும் ராஜபக்சக்கள் இல்லாத எந்த ஒரு கூட்டணிக்கும் ஆதரவளிக்க போவதில்லை என பசில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.     

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.