ஊழியர் சேமலாப நிதியச் சட்டம் (EPF), ஊழியர்க நம்பிக்கை நிதியச் சட்டம் (ETF) உள்ளிட்ட ஆறு (06) சமூகப் பாதுகாப்புச் சட்டங்கள் நீக்கப்பட்டு, ஒரே சமூகப் பாதுகாப்புச் சட்டமாக மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் (Ministry of Foreign Affairs) அவதானிப்புகள், பல்வேறு நிறுவனங்களால் வழங்கப்படும் சமூக பாதுகாப்பு சலுகைகளில் முரண்பாடுகள் மற்றும் சமச்சீரற்ற தன்மைகள் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக, கடந்த ஆண்டு (2023) நவம்பரில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தது.
6 சட்டங்கள்
அதற்கமைவாக நடைமுறையில் உள்ள அனைத்து சமூகப் பாதுகாப்பு அமைப்புகளையும் ஒருங்கிணைத்தல் தொடர்பான பொறிமுறையைத் தயாரிப்பதற்கான முன்மொழிவுகளைத் தயாரிப்பதற்கு அதிபரின் செயலாளர் குழுவொன்றை நியமித்தார்.
அதன்படி, தனியார் மற்றும் அரச நிறுவனங்கள் மற்றும் முறைசாரா துறை ஊழியர்களின் சமூக பாதுகாப்பு நிதியை ஒரே நிறுவனம் செயற்படுத்த வேண்டும் என்றும், அதற்காக தற்போதுள்ள சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் குழு பரிந்துரை செய்துள்ளது.
இங்கு, ஊழியர் சேமலாப நிதிச் சட்டம், ஊழியர் நம்பிக்கை நிதிச் சட்டம், இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபை, தொழிலாளர் இழப்பீட்டுக் கட்டளைச் சட்டம், கடற்றொழிலாளர் ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நலத்திட்டச் சட்டம், விவசாயிகளின் ஓய்வூதியம் மற்றும் சமூகநலச் சட்டம் ஆகியவற்றை நீக்குவதற்கு சம்பந்தப்பட்ட குழு பாதுகாப்புப் பயன் திட்டச் சட்டத்தை பரிந்துரை செய்துள்ளது.
காப்பீடு வழங்குதல்
அத்துடன் முறையான ஆய்வுக்குப் பிறகு, இந்தக் குழு முறையான துறைக்கான பங்களிப்பு ஓய்வூதியத்தைத் தயாரிப்பதற்கான பரிந்துரைகளையும் செய்துள்ளது.
அனைத்து சமூகப் பாதுகாப்புத் திட்டங்களையும் ஒருங்கிணைத்து, மறுவேலைவாய்ப்புப் பலன்கள், பணியின் போது ஏற்படும் விபத்துகள் மற்றும் காயங்களுக்கு காப்பீடு வழங்குதல், மகப்பேறு பலன்களை வழங்க காப்பீட்டுத் திட்டத்தைத் தயாரிக்கவும் மேற்கண்ட குழு பரிந்துரைத்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.