ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் சதுரங்க விளையாட்டில் பல கட்சிகள் திணறி வருவதாக அரசியல்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தோல்வி அடைந்த அரசியல்வாதியான ரணிலை அதியுச்ச பதவியில் அமர்த்தி தம்மை பாதுகாத்துக் கொள்ள முயற்சித் ராஜபக்சர்களுக்கு அது பெரும் ஆபத்தாகவும் தற்போது மாறியுள்ளதாக அரசியல் தகவல்கள் கூறுகின்றன.
வீட்டுக்குள் ஓட்டகம் புகுந்த கதையாக மாறியுள்ள ரணில், மொட்டு கட்சிக்குள் பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளமை ராஜபக்ச குடும்பத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுஜன பெரமுன கட்சி
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என பெரும்பான்மையான பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
தற்போதைய நெருக்கடி நிலைமையை புரிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும் ரணிலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை முன்னெடுத்து வருகின்றார்.
எனினும் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி எனும் கனவில் காய்நகர்த்தல்களை மேற்கொள்ளும் நாமல் ராஜபக்ஷவுக்கு பாரிய ஏமாற்றமாக அது அமைந்துள்ளது.
தேசிய அமைப்பாளர்
இந்நிலையில் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கு விரும்புவோர் பொதுஜன பெரமுன கட்சியை விட்டு வெளியேறலாம் என, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை முன்னெடுத்து அந்த கொள்கைகளை பாதுகாக்கக்கூடிய ஒருவராகவே தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இருக்க வேண்டும் என நாமல் குறிப்பிட்டுள்ளார்.
எம்முடன் நட்பு பாராட்டி வாக்குகளை பெற்ற பின்னர் மற்றுமொரு கட்சியுடன் உறவு கொண்டாடும் கட்சிகளை இணைத்துக் கொள்ளப் போவதில்லை என நாமல் வலியுறுத்தியுள்ளார்.
கட்சிக்குள் முரண்பாடு
பொதுஜன பெரமுனவுடன் சென்று வெற்றிபெற முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முகாமில் உள்ள ஒரு பகுதியினர் கூறுகின்றனர். அவ்வாறு கூறுபவர்கள் கட்சியை விட்டு வெளியேறி அங்கு சென்று இணையலாம் என நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மைக்கால சம்பவங்களின் அடிப்படையில் ராஜபக்சர்கள் பெரும் அச்சமடைந்துள்ளதாக, அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டி காட்டியுள்ளனர். இதன் காரணமாகவே நாமல் தனது அதிருப்தி வெளியிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.