தற்போதைய ஆட்சியாளர்கள் போலி வேலைகளுக்கு முடிவில்லாது பணம் ஒதுக்கீடு செய்வதோடு இந்தப் பணத்தில் டீல் அரசியலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
குருநாகல்,
மாவத்தகம, பரகஹதெனிய தேசிய பாடசாலைக்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலைகளில் திட்டங்களை முன்னெடுத்து வரும் போது, நாடாளுமன்றத்திலும் வெளியிலும் எங்கள் மீது கோபத்தை வெளிப்படுத்தி குரோதம்
காட்டுகின்றனர்.
ஆட்சியாளர்களின் குரோதம்
நான் பிள்ளைகளுக்கு மது, போதைப்பொருள், சிகரெட் போன்றவற்றை பகிர்ந்தளிக்கவில்லை. கணினிகள், அகராதிகள் ஆகியவற்றையே பகிர்ர்ந்தளிக்கிறேன். இவை தவறான
விடயங்கள் அல்ல.
ஆட்சியாளர்கள், தலைநகரின் ஆடம்பர குளிரூட்டி அறைகளில் இருந்து கொண்டு ஒரு
குறிப்பிட்ட கும்பலுடன் டீலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழமைவாத கல்வி
இந்நாட்டிலுள்ள சாதாரண
குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் உயர் மட்டத்தை அடைவதை அவர்கள்
விரும்பவில்லை.
காலத்திற்கேற்ற நவீன கல்வியை வழங்காது, பழமைவாத கல்வியை
வழங்குவதன் மூலம் இந்த பிள்ளைகளை அடிமைகளாக வைத்திருப்பதே அவர்களின் நோக்கமாக உள்ளது எனக் கூறியுள்ளார்.