முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

1992 இல் எடுக்கப்பட்டதும் 2007 இல் பிரிக்கப்பட்டதும் இணைத்து கிடைக்கப்பெற வேண்டும்: சிறீரங்கேஸ்வரன்

1992 இல் எடுக்கப்பட்டதும் 2007 இல் பிரிக்கப்பட்டதும் இணைத்து கிடைக்கப்பெற
வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளதென என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்
ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் (22.06.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே ஜனாதிபதி
தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாச பொலிஸ் அதிகாரம் மற்றும் காணி
அதிகாரங்களை தருவதாக கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில்
தங்களின் கருத்து என்ன என ஊடகவியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே
அவர் இவ்வாறு  கூறியுள்ளார்.

தமிழர்களது அரசியல் உரிமை

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“ஈழ விடுதலை போராட்டம் ஆரப்பிக்கப்பட்டதன் பின்னர் தமிழர்களது அரசியல் உரிமை
பிரச்சினை தொடர்பாக பூட்டான் திம்பு பேச்சுவார்த்தை, வட்டமேசை மாநாடு, என
பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் 1987 ஆம் ஆண்டு “வடமராட்சி
ஒ்பரேசன் லிபரேசன்” இராணுவ நடவடிக்கையின் ஊடாக வடமராட்சி பிரதேசம் படையினரால்
மீட்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, இந்தியாவின் உணவுக் கப்பல்கள் துயர்துடைப்பு பொருட்களை
ஏற்றிக்கொண்டு இலங்கை நோக்கி பயணததை மேற்கொண்டது. ஆனால் இலங்கைக்
கடற்படையினரால் அந்த கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

1992 இல் எடுக்கப்பட்டதும் 2007 இல் பிரிக்கப்பட்டதும் இணைத்து கிடைக்கப்பெற வேண்டும்: சிறீரங்கேஸ்வரன் | Sirirangeswaran Speech At Jaffna

அதனையடுத்து, இந்தியாவிலிருந்து மிராஜ் யுத்த விமானங்கள் யாழ். குடாநாட்டின் மீது
உணவுப் பொருட்களை பரசூட் மூலம் போட்டுச் சென்றன.

இதன்பின்னர் அன்றை அரசு
இந்திய –  இலங்கை ஒப்பந்தத்தை கைச்சாத்திட இலங்கை அரசு ஒப்புக்கொண்டது.

அதனடிப்படையில் 1987 ஆம் ஆண்டு யூலை 29 ஆம் திகதி ராஜீவ் – ஜே. ஆர் ஒப்பந்தம்
ஏற்படுத்தப்பட்டது.

இதில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் மாகாண ஆட்சி
முறைமை கொண்டுவரப்பட்டது.

ஆயினும், ஒப்பந்தம் செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்துக்குள் சர்வஜன
வாக்கெடுப்பின் மூலம் அது அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற சரத்தும்
ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்ததது.

ஆனால், புலிகள் இயக்கமும் பிரேமதாச அரசும் இணைந்து சர்வஜன வாக்கெடுப்பு நடைபெறவிடாது தடுத்தனர்.

1992 இல் எடுக்கப்பட்டதும் 2007 இல் பிரிக்கப்பட்டதும் இணைத்து கிடைக்கப்பெற வேண்டும்: சிறீரங்கேஸ்வரன் | Sirirangeswaran Speech At Jaffna

இதன்பின்னர்
இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இந்திய அமைதிகாக்கும் படை
இலங்கையிலிருந்து வெளியேறியது.

அதைத்தொடர்ந்து 1992 ஆம் அண்டு இன்றைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின்
தகப்பனார் ரணசிங்க பிரேமதாச 1992 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க சட்டத்தின் மூலம்
மாகாணங்களுக்கு வழங்கப்பட்டிருந்த முக்கிய அம்சங்களை மத்திய அரசின் கீழ்
தனக்கிருந்த அதிகாரங்களை கொண்டு எடுத்துக்கொண்டார்.

இதேபோன்று அனுரகுமார திசாநாயக்கவின் ஜே.வி.பி இயக்கம் 2007 இல் உயர் நீதிமன்றம்
ஊடாக தமிழ் தாயக ஒரே நிலப்பரப்பான வடக்கு கிழக்கு இணைப்பை நீக்கினர்.

1992 இல் எடுக்கப்பட்டதும் 2007 இல் பிரிக்கப்பட்டதும் இணைத்து கிடைக்கப்பெற வேண்டும்: சிறீரங்கேஸ்வரன் | Sirirangeswaran Speech At Jaffna

ஆகவே 1992 இல் எடுக்கப்பட்டதும் 2007 இல் பிரிக்கப்பட்டதும் இணைத்து
கிடைக்கப்பெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.