நாட்டிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை 2,500 ரூபாவால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
இதேவேளை அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு இந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் என அதிபர் ரணில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு (Batticaloa) – செங்கலடி பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (23) இடம்பெற்ற இளைஞர்களுடனான சந்திப்பின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதிபரிடம் தெரிவிப்பு
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் மட்டும் 1800க்கும் மேற்பட்ட முன்பள்ளிகள் உள்ளதாக அந்த மாகாணத்தைச் சேரந்த இளைஞர்கள் அதிபரிடம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை போதுமானதாக இல்லை என சுட்டிக்காட்டியதுடன் அவர்களின் கொடுப்பனவை அதிகரிக்க யோசனை உள்ளதா எனவும் அதிபரிடம் கேள்வியெழுப்பியமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் வீடற்ற மக்களுக்கான புதிய வீட்டுத்திட்டங்களை ஆரம்பித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அதிபர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.