இந்தியாவின் (India) டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் (Delhi airport) முதல் முனையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று (28) இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியகியுள்ளது.
மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான சேவைகள் நிறுத்தம்
இதேவேளை முதலாவது முனையத்தின் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
BREAKING ????
First the Mahakal corridor, now Delhi airport
• Today, the roof of Delhi Terminal 1 airport collapsed
6* People are Injured
Is this the “finest infrastructure” of the vishvaguru he boast about?#DelhiRains #DelhiAirport pic.twitter.com/D4NVSP1eDY
— Amock (@y0geshtweets) June 28, 2024
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று (27) காலை முதல் மழை பெய்து வருவதனால் ஏராளமான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இந்த நிலையில், டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இன்று (28) அதிகாலை 5.30 அளவில் இடிந்து விழுந்துள்ளது.
தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர்
விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விமான நிலையத்திற்கு விரைந்து சென்றனர்.
#WATCH | 4 people were injured after a roof collapsed at the Terminal-1 of Delhi airport.
(Video source – Delhi Fire Service) pic.twitter.com/Uc0qTNnMKe
— ANI (@ANI) June 28, 2024
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது மேற்கூரை விழுந்ததால் அவை பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இடிபாடுகளுக்கிடையிலும் கார்களுக்குள்ளும் சிக்கியவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.