முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்: விவாதத்தில் வென்றது யார்.!

அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கும் (Joe Biden) முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கிடையிலான (Donald Trump) விவாதத்தில் ட்ரம்பை எதிர்கொள்ள முடியாமல் பைடன் திணறியதாக கூறப்படுகின்றது.

இதனால் அவரது கட்சி ஆதரவாளர்களும், நிர்வாகிகளும் பெரும் அதிர்ச்சி அடைந்ததோடு பைடனை விலக்கி வேறு வேட்பாளரை களத்தில் இறக்க மூத்த நிர்வாகிகள் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க (USA) அதிபர் தேர்தலுக்குமுன் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கமான விடயமாகும்.

இந்த விவாத நிகழ்ச்சிகளின்போது வெளியுறவு கொள்கைகள், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு வேட்பாளர்களும் விவாதிப்பார்கள்.

நேருக்கு நேர் விவாதம்

அந்த வகையில் அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் ஜோ பைடன், டொனால்ட் ட்ரம்ப் இடையேயான நேருக்கு நேர் விவாதம் நேற்று (28) நடைபெற்றது.

donald trump biden debate

விவாத நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பாகியதோடு மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த விவாதத்தில் ட்ரம்ப், பைடன் என இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இந்த விவாதத்திலேயே, ட்ரம்பை எதிர்கொள்ள முடியாமல் பைடன் திணறியதாக கூறப்படுகின்றது.

ஏற்கெனவே பைடனின் வயது தேர்தலில் பேசு பொருளான நிலையில் அவரது உடல் தளர்ச்சி மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல்

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடைபெற உள்ள நிலையில் தற்போதைய அதிபர் ஜோபைடன் ஜனநாயக கட்சி சார்பிலும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார்கள்.

சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்: விவாதத்தில் வென்றது யார்.! | Presidential Debate Joe Biden And Donald Trump

இத்தேர்தலில் முக்கிய நிகழ்வாக இரு கட்சி அதிபர் வேட்பாளர்களும் நேருக்கு நேர் விவாதத்தில் பங்கேற்று இருவரும் காரசார விவாத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அமெரிக்க பொருளாதாரம், குடியேற்றம், உக்ரைன், இஸ்ரேல் விவகாரம், அரசின் பல்வேறு சட்டங்கள் குறித்து ட்ரம்ப் வாதத்திற்கு பதிலடி தர முடியாமல் பைடன் திணறியதாக கூறப்படுகிறது.

யாருக்கு வெற்றி

இதில் ட்ரம்ப் விவாதம் வெற்றிகரமாக அமைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்: விவாதத்தில் வென்றது யார்.! | Presidential Debate Joe Biden And Donald Trump

இந்த விவாதத்தில் வெற்றி பெற்றவர் யார்? என அமெரிக்க வாக்காளர்கள் 565 பேரிடம் குறுஞ்செய்தி மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதில், 67 சதவிகிதம் பேர் விவாதத்தில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளனர்.

அதே சமயம், 33 சதவிகிதம் பேர் மட்டுமே விவாதத்தில் பைடன் வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.