இலங்கை மின்சார சபை (CEB) தமது ஊழியர்களுக்கான புதிய சம்பள அமைப்பு, செயல்திறன் அடிப்படையிலான ஊக்குவிப்பு முறை மற்றும் பதவி உயர்வு செயல்முறையை எதிர்வரும் வாரங்களில் அறிமுகப்படுத்த உள்ளது.
இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்களுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது இது குறித்து கலந்துரையாடப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஊழியர்களின் எண்ணிக்கை
கலந்துரையாடலின் போது, எதிர்காலத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்படும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தற்போதுள்ள அங்கீகரிக்கப்பட்ட 26,000 க்கும் அதிகமான பணியாளர்களின் எண்ணிக்கையை திருத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும் சீர்திருத்தங்களின் கட்டமைப்பு, பல்வேறு பணிகளைச் செயல்படுத்துவதற்கான காலக்கெடு, வாரிசு நிறுவனங்களுக்கான நியமனங்கள், மனிதவள மேலாண்மை, சம்பளக் கட்டமைப்புகள், கொள்கை மற்றும் நிர்வாக முடிவுகள் குறித்தும் விவாதங்கள் நடைபெற்றுள்ளன.