தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) முகநூலில் மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார( Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று(29.06.2024) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றி உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சம்பள உயர்வு
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நிஜத்தில் அனுரவினால் ஜனாதிபதியாக முடியாது. எதிர்வரும் மூன்று பௌர்ணமி தினங்களுக்குள் ஆசிரியர்களை வீதியில் இறங்காது சம்பள உயர்வு வழங்க முடியும்.
ஹர்ஷ டி சில்வா நாட்டை, சஜித் பிரேமதாசவை வீழ்த்தும் வகையில் செயற்பட்டு வருகிறார்.
நாடு அடைந்துள்ள வெற்றிகளை பின்நோக்கி நகர்த்தும் முயற்சிகளில் சில தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர் என குற்றம் சுமத்தியுள்ளார்.