பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா எதிர்வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடுவதற்காக தனது பிரசாரப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளார்.
அதன்படி அடுத்த மாதம் அவர் அதிகாரபூர்வமாக பிரசாரத்தை தொடங்க உள்ளார்.
நிபந்தனைகள் விதிப்பு
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்புமனுவை வழங்குவதற்கு பல நிபந்தனைகளை நிறைவேற்றுமாறு தமக்கு கூறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலுக்கு ஆதரவு
இதேவேளை, எதிர்க்கட்சியில் இருந்து அரசு பக்கம் இணையப்போவதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைக்காவிட்டால் அதிபர் தேர்தலுக்கு ஆதரவு வழங்க முடியாது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் அறிவித்துள்ளது.
எனினும்,அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் குறித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.