முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காட்டாற்று வெள்ளம் போல ரணிலை ஆதரிக்கப்போகும் மொட்டு உறுப்பினர்கள்

எதிர்வரும் அதிபர் தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு (ranil wickremesinghe)ஆதரவளிக்க சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஓரிரு உறுப்பினர்கள் தயாராக இல்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர(kanchana wijesekera) தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்க வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கி செல்லும் வழிகள் குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் முகமாக மாத்தறை கோட்டை மைதானத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

அரசியல் விளையாட்டு

கடந்த இரண்டு வருடங்களில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம். அப்போது நாங்கள் அரசியல் விளையாடுவதை விடுத்து அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து நாட்டை முன்னோக்கி நகர்த்தினோம். அப்போது இருந்த பிரச்சனைகளால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது சாத்தியமில்லை என்று பலர் கூறினர்.

காட்டாற்று வெள்ளம் போல ரணிலை ஆதரிக்கப்போகும் மொட்டு உறுப்பினர்கள் | Peramuna Support Ranil Wickremesinghe

ஆனால் அதிபர் ரணில் விக்ரமசிங்க அந்த சவாலை ஏற்று இரண்டு வருடங்களில் நாட்டை முன்னேற்றினார்.

பேச்சுக்கே மட்டுப்படுத்தப்பட்ட தலைவர்களை எதிர்வரும் தேர்தலில் நியமிக்கக் கூடாது. நமது எதிர்காலத்தை வலுப்படுத்தக்கூடிய தலைவர் தேவை. இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல நாம் அவருக்கு ஆதரவளிக்காமல் இருந்திருந்தால் இன்று நாட்டின் நிலைமையே மாறியிருக்கும்.

எதிர்காலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்துவோம். அந்த பலன்களை அடுத்த தேர்தலில் இழப்பீர்களா. இல்லையெனில், இப்படியே தொடரலாமா என்று யோசிக்க வேண்டும்.

தலைமைத்துவம்

இந்த நாட்டிற்கு பிரிவினைவாதிகளோ அல்லது பெருமையடிக்கும் தலைவர்களோ தேவையில்லை. மக்களுக்காக சரியான முடிவுகளை எடுக்கக் கூடிய தலைமைத்துவம் இந்த நாட்டுக்குத் தேவை. அத்தகையதொரு தலைமையை இன்று நாடு பெற்றுள்ளது.

காட்டாற்று வெள்ளம் போல ரணிலை ஆதரிக்கப்போகும் மொட்டு உறுப்பினர்கள் | Peramuna Support Ranil Wickremesinghe

எனவே,அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர், ஓரிருவர் மாத்திரமல்ல, பொதுஜன பெரமுனவின் பெரும் பகுதியினர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளனர் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.