கனடாவில் (Canada) வானில் திடிரென தோன்றிய ஒரு ஒளியின் காணொளியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனடிப்படையில், கனடாவின் மானிடோபா (Manitoba) மாகாணத்தில் காரில் பயணித்துக் கொண்டிருந்த தம்பதியினர் வானில் திடிரென தோன்றிய ஒரு ஒளியை கண்டுள்ளனர்.
இந்தநிலையில், இரண்டு கோளங்களாக நெருப்பு பிழம்பு போல அது பிரகாசமாக ஒளிர்ந்துள்ளதுடன் இன்னும் அருகில் சென்று பார்த்த போது மேலும் இரண்டு கோள உருண்டைகள் ஒளிர ஆரம்பித்துள்ளது.
வேற்றுக்கிரகவாசிகள்
இவ்வாறு, மொத்தமாக நான்கு சூரியன்கள் ஒளிர்வதைப் போல் காட்சியளித்துள்ள நிலையில் ஒரு வேளை இது வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும் தட்டுகளா இருக்குமா என்ற சந்தேகம் எழுவதாவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த இந்த நிகழ்வை காணொளியாக பதிவு செய்த தம்பதியினர் அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.