இந்து பக்தர்களால் மேற்கொள்ளப்படும் வருடாந்த கதிர்காமம் பாத யாத்திரையின்போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இராணுவ தளபதியின் பணிப்புரையின் பிரகாரம் பாதயாத்திரையில் கலந்து கொள்பவர்களின் நீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்க இராணுவத்தினரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாத யாத்திரை
இந்த பாதயாத்திரை குமண தேசிய வனப் பூங்காவில் ஆரம்பமாகி அதனூடாக சுமார் 79 கிலோ மீற்றர் பயணித்து கதிர்காமம் ஆலயத்தை சென்றடைகிறது.
வருடாந்தம் நடைபெறும் இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியில் இருந்து பெருமளவிலான இந்து பக்தர்கள் பங்குபற்றுவதுடன், இந்நிகழ்வை சிறப்பாக நடத்துவதற்கு இராணுவத்தினரால் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.