முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்க அதிபர் தேர்தல் : பைடனை பின் தள்ளிய கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் களத்தில் உள்ள தற்போதைய அதிபர் ஜோ பைடனை விடவும் துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு அதிக ஆதரவு உள்ளமை உறுதிப்படுததப்பட்டுள்ளது.

சி.என்.என். தொலைக்காட்சி நடத்திய புதிய கருத்து கணிப்பிலேயே இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

அதன்படி, தற்போது அமெரிக்காவின் துணை அதிபராக உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசுக்கு அதிபர் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

கருத்துக் கணிப்பின்போது டிரம்பா, பைடனா என்ற கேள்விக்கு 49 சதவீதம் பேர் டிரம்புக்கும் 43 சதவீதம் பேர் பைடனுக்கும் ஆதரவளித்துள்ளனர். 6 சதவீத வித்தியாசத்தில் டிரம்ப் முன்னிலை பெற்றார்.

டிரம்பா, கமலா ஹாரிசா 

அதேசமயம் டிரம்பா, கமலா ஹாரிசா என்ற கேள்விக்கு 47 சதவீத வாக்காளர்கள் டிரம்புக்கு ஆதரவாகவும். 45 சதவீத வாக்காளர்கள் கமலா ஹாரிஸ் அதிபர் ஆகலாம் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளனர். டிரம்பை விட வெறும் 2 சதவீத வித்தியாசத்தில் மட்டுமே கமலா ஹாரிஸ் உள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் : பைடனை பின் தள்ளிய கமலா ஹாரிஸ் | Kamala Harris Has A Better Chance Than Joe Biden

மிட்செல் ஒபாமா 

டிரம்பை விட மிட்செல் ஒபாமா 11 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார். ஆனால் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் : பைடனை பின் தள்ளிய கமலா ஹாரிஸ் | Kamala Harris Has A Better Chance Than Joe Biden

மேலும், பைடனுக்கு உள்ளதைவிட கமலா ஹாரிசுக்கு பெண் வாக்காளர்களின் ஆதரவு கணிசமாக உள்ளது. எனவே அதிபர் தேர்தலில் டிரம்புக்கு எதிராக, கமலா ஹாரிசை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது என கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்