பிரித்தானியாவில் முதல் பெண் நிதி அமைச்சராக 45 வயதான ரேச்சல் ரீவ்ஸை (Rachel Reeves) நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
14 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்றையதினம் (5.7.2024) பிரித்தானியாவில் (United Kingdom) தொழிற்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
அதிகார மாற்றம் காரணமாக தொழிலாளர் கட்சியின் 61 வயதான கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) நாட்டின் 58 ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார்.
பிரித்தானியா பொதுத் தேர்தல்
இது தவிர துணைப் பிரதமர் பதவி ஏஞ்சலா ரெய்னருக்கு கிடைத்துள்ளதோடு, அவருக்கு சமத்துவம், வீட்டுவசதி மற்றும் சமூகங்களுக்கான அமைச்சராகவும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்று மொத்தமுள்ள 650 இடங்களில் அக்கட்சி 412 இடங்களை கைப்பற்றியது.
கன்சர்வேட்டிவ் கட்சிகள் 120 இடங்களை மட்டுமே வென்றன.
கடந்த 200 ஆண்டுகளில் கன்சர்வேட்டிவ் கட்சியின் மிகப்பாரிய தோல்வி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.