இலங்கை வங்குரோத்து நிலையை எதிர்கொண்டு எந்த நாட்டிடமும் கடன் பெறவில்லை
என்பதை தெரிந்திருந்தும் நாட்டின் கடன் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள்
மக்களை ஏமாற்றி வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ
நாணயக்கார தெரிவித்துள்ளார்.
காலி – ஹக்மன டெனி அபேவிக்ரம விளையாட்டரங்கில் நேற்றுநடைபெற்ற
‘ஜயகமு ஸ்ரீலங்கா’ மக்கள் நடமாடும் சேவை நிகழ்வில் இதனை தெரிவித்துள்ளார் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
வங்குரோத்து நிலை
“நாங்கள் வங்குரோத்து அடைந்த பிறகு எந்த நாட்டிலிருந்தும் கடன் பெறவில்லை
இருப்பினும், சில அரசியல்வாதிகள் கடன் அதிகரித்துள்ளதாக பகிரங்கமாக
தெரிவிக்கின்றனர் .
எங்கள் கடன்கள் டொலர்களில் கூறப்படும்போது கடன் ஏற்ற
இறக்கமாக இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் இவ்வாறு
பொய் பிரச்சாரங்களை செய்து மக்களை தவறாக வழிநடத்துகின்றனர்.
ஊட்டச்சத்து குறைபாடு நல்லதா கெட்டதா என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித்
தலைவர் கேட்டார். இந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படக்கூடாது
என்பதற்காக குழந்தைகளின் பெற்றோர் வெளிநாடு சென்று பணம் அனுப்புகின்றனர்.
12 பில்லியன் டொலர்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த குழந்தைகளை நேசிப்பதால் ஆறுதல் மற்றும்
சோறு கொடுக்கிறார். நாட்டின் துரதிர்ஷ்டங்களை மாற்றி நல்லவர்களாக மாற்ற
முயற்சிக்கிறோம்.
எமது பிள்ளைகளின் பெற்றோர் வெளிநாட்டில் இருந்து பணம்
அனுப்பிய போது, ராஜபக்சர்கள் திருடுவார்கள் அனுப்ப வேண்டாம் என ஜேவிபியினர்
கூறினார்கள் .
ஆனால் அப்பெற்றோர்கள் அதை நம்பாமல் தங்கள் பிள்ளைகள் மற்றும் நாட்டின்
மீதுள்ள அன்பினால் 12 பில்லியன் டொலர்ககளை இந்த நாட்டுக்கு அனுப்பி
வைத்துள்ளனர்.
அதனால்தான் இந்நாட்டு மக்கள் மீண்டும் உணவும் பானமும் பெற
முடிந்தது” என்றார்.