இலங்கைக்கான கொழும்பை (Colombo) நோக்கிய தனது விமான சேவைகளை அதிகரிக்கவுள்ளதாக கட்டார் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனம் (Qatar Airways) அறிவித்துள்ளது.
இதன் படி, கொழும்புக்கு இயக்கப்படும் தனது ஐந்து விமான சேவைகளை ஆறாக அதிகரிக்கவுள்ளதாக க கட்டார் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த ஆறாவது விமான சேவையானது, எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேலதிக சேவை
கட்டார் ஏர்வேஸ் கொழும்புக்கான தனது விமான சேவையின் போது, 30 வணிக வகுப்பு இருக்கைகள் மற்றும் 281 சாதாரண வகுப்பு இருக்கைகள் கொண்ட போயிங் 787 வகை விமானத்தை இயக்குகிறது.
இது தொடர்பில் கட்டார் ஏர்வேஸ் சேவையின் இலங்கை மற்றும் மாலைதீவவிற்கான முகாமையாளர் ஜொனாதன் பெர்னாண்டோ குறிப்பிடுகையில், “கொழும்புக்கும் கொழும்பிலிருந்தும் கட்டார் ஊடான தொடர்புகளை அதிகரிப்பதற்காக இந்த மேலதிக சேவையை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
புதிய வசதிகள்
இந்த விமான சேவை அதிகரிப்பானது பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்குவதில் எங்களின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.
புதிய விமான சேவைகள் உலகின் சிறந்த விமான நிலையமான கட்டாரின் ஹமாத் சர்வதேச விமான நிலையம் ஊடாக மத்திய கிழக்கு, ஐரோப்பா, ஆபிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு செல்வதற்கான வசதிகளை வழங்கும்” என குறிப்பிட்டுள்ளார்.