வவுனியாவில் (Vavuniya) தபால் திணைக்களத்தில் இன்று (08) மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் மாத்திரம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை (Sri Lanka) முழுவதும் பல்வேறு தொழிற்சங்கத்தினர் சுகயீன மற்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்கும் நிலையில் வவுனியா தபால் நிலையத்தில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில், தபால் நிலையத்தின் முன் அரங்க செயற்பாடான முத்திரை வழங்கல், தந்தி சேவைகள், மின்கட்டணம் மற்றும் தண்டப்பணம் செலுத்தும் செயற்பாடுகள் உட்பட வயோதிபர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் திட்டமும் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
சுகயீன விடுமுறை
எனினும், தபால் விநியோக செயற்பாடுகள் முற்றாக முடங்கி காணப்பட்டிருந்தாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில், பல அரச உத்தியோகத்தர்கள் இன்று சுகயீனம் என தமது அலுவலகங்களுக்கு தந்தி மூலமாக தகவல் வழங்குவதற்கு வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.