விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசையில் இன்று என்ன நடந்துள்ளது என்று பார்க்கலாம் வாங்க.
அருண் மற்றும் அவரது அம்மா பேச்சை கேட்டு மீனா மற்றும் முத்துவிடம் சண்டைபோட்டு செல்கிறார் சீதா. இதன்பின் முத்துவிடம் சீதாவின் அம்மா மன்னிப்பு கேட்கிறார்.

கிரிஷ் – மனோஜ் – ரோகிணி
பின் கிரிஷின் பள்ளியில் இருந்து மனோஜிற்கு போன் வருகிறது. கிரிஷ் அனைத்து பாடத்திலும் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார் என கூறுகிறார்கள். மேலும் உங்கள் கையால்தான் சான்றிதழ் வாங்க கிரிஷ் ஆசைப்படுவதாகவும் கூறுகிறார்கள். இதன்பின் ரோகிணி மனோஜ் இருவரும் கிளம்பி பள்ளி செல்கிறார்கள்.
அங்கு முத்து உள்ளார். மனோஜ் வருவதை பார்த்து ‘நீ என்ன இங்க’ என கேட்கிறார். இதன்பின் மனோஜ், ரோகிணி மற்றும் கிரிஷ் மூவரும் ஒன்றாக வெளியே வருகிறார்கள். கிரிஷை தன்னுடன் காரில் அழைத்து செல்ல ரோகிணி ஆசைப்படுகிறார். அதன்படி அழைத்து செல்கிறார்.

பின், கிரிஷுக்கு நம்மை பிடிக்காமல் போய்விட்டதோ என சொல்லி வருத்தப்படுகிறார் முத்து. ஆனால், மீனா எப்படியோ சமாளித்து முத்துவை சமாதானம் செய்கிறார். பிறகு வீட்டிற்கு கிரிஷ் உடன் மனோஜ் வருகிறார்.
இதை பார்க்கும் விஜயா வழக்கம் போல் சண்டை போடுகிறார். இதெல்லாம் முத்து மீனா தானே செய்வார்கள், நீங்கள் ஏன் இதை செய்கிறார்கள் என கோபத்துடன் பேசுகிறார். இறுதியாக நடந்த விஷயத்தை சொல்லி மனோஜ் சாரி என கூறியபின் தான் விஜயா கோபம் தணிந்தது.

அன்னம் சீரியல் நடிகர்கள், நடிகைகளின் உண்மையான வயது.. இதோ பாருங்க
ரவி பேக்கில் நீத்துவின் உடை
அப்போது கோவாவில் போட்டியை முடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார் ரவி. அனைவரும் அவரை பாராட்டுகிறார்கள். பின், அனைவருக்கும் அவர் வாங்கி வந்த பரிசை கொடுக்கிறார்.

இதன்பின் ரூமுக்குள் சென்று தனது பேக்கில் இருந்து துணிகளை எடுக்கிறார். அப்போது ஒரு பெண்ணின் உடை பேக்கில் இருக்க, இது யாருடையது என ஸ்ருதி கேட்க, நீத்து உடையாக இருக்கும் என ரவி கூறுகிறார். இதனால் கடும் கோபமடைகிறார் ஸ்ருதி. இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

