தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவருக்கான வெற்றிடத்தை எல்லோருடைய சம்மதத்துடன் நிரப்புவதற்கு விரும்புகிறோம் என தமிழர் ஈழ விடுதலை இயக்கம்(TELO) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனின் மறைவு தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
”தற்போது சம்பந்தனின் மறைவுக்கு பின்பு புதிதாக நாடாளுமன்ற குழுத் தலைவர் ஒருவரை தெரிவு செய்யவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு
கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுள் கடந்த காலங்களில் பல உள்ளீட்டுப் பிரச்சினைகள், மனவேதனைகள் வந்தபோதும் நாங்கள் நாடாளுமன்றத்தினுள் எமது மக்களின் தேவை,
நன்மை கருதி ஒற்றுமையாகத்தான் செயல்பட்டு வந்தோம்.
அந்த அடிப்படையில் தொடர்ந்தும் ஒற்றுமையாக நாடாளுமன்றத்திலுள் செயல்பட விரும்புகிறோம்.
எனவே ஏற்பட்டுள்ள கூட்டமைப்பின் குழுத் தலைவருக்கான வெற்றிடத்தை எல்லோருடைய சம்மதத்துடனும் நிரப்புவதற்கு விரும்புகிறோம்”என தெரிவிக்கப்பட்டுள்ளது.