முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி தேர்தல் திகதியை ஒத்திவைக்க மனு: உயர்நீதிமன்ற தீர்ப்பு

Courtesy: Sivaa Mayuri

ஜனாதிபதித் தேர்தல் திகதி குறித்த விளக்கத்தை உயர்நீதிமன்றம் வழங்கும் வரை ஜனாதிபதித் தேர்தலை தடுக்கும் உத்தரவைக் கோரி, தொழிலதிபர் சி.டி லெனாவ தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் (எஃப்ஆர்) மனு, இன்று பிரதம நீதியரசர் தலைமையிலான 5 பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் திகதி தொடர்பில் நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை, தற்போது திட்டமிடப்பட்ட காலத்திற்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு இந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ, ப்ரீத்தி பத்மன் சூரசேன மற்றும் எஸ்.துரைராஜா ஆகிய ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த மனுவை இன்று பரிசீலித்தது.

தள்ளுபடி 

குறித்த அடிப்படை உரிமை மனுவுக்கு எதிராக தலையீடு கோரி மேலும் தாக்கல் செய்யப்பட்ட நான்கு எதிர்மனுக்களும் இன்று பரிசீலிக்கப்பட்டன.

petition-for-postponing-the-presidential-election

இதனையடுத்தே, உயர்நீதிமன்றம் தமது வரம்புக்குள், அடிப்படையிலேயே இந்த மனுவை ஒரு இலட்சம் ரூபாய் சட்டச்செலவுடன் தள்ளுபடி செய்தது.

தேசிய மக்கள் சக்தி, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் வசந்த முதலிகே, தேசிய சுதந்திர முன்னணியின் விமல் வீரவன்ச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ஆகியோரால், இந்த மனுவுக்கு எதிராக இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்