யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கி ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மின்பிறப்பாக்கியானது, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனின் வழிகாட்டலுக்கு அமைய வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் படி, 150kVA வலுவுடைய இந்த மின்பிறப்பாக்கி தற்காலிக அடிப்படையில் இன்று வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊழல்கள்
இதேவேளை, புதிதாக வழங்கப்பட்ட இந்த மின்பிறப்பாக்கியை பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் பொறுப்பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், நிரந்தரமாக பயன்படுத்தும் வகையில் மின்பிறப்பாக்கியொன்றை பெறுவதற்கு தற்போது ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.
அதற்கான அறையொன்றை அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் தெரியப்படுத்தியுள்ளார்.
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு பதில் அத்தியகட்சகராக நியமிக்கப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா, கடந்த சில நாட்களாக வைத்தியசாலையில் இடம்பெற்று வந்த முறைக்கேடுகள் மற்றும் ஊழல்களை வெளிப்படுத்தி இருந்தார்.
வைத்தியர் அர்ச்சுனாவிற்கு ஆதரவு
அதனை தொடர்ந்து, கொதித்தெழுந்த தென்மராட்சி மக்கள், வைத்தியர் அர்ச்சுனாவிற்கு ஆதரவாகவும் வைத்தியசாலையில் இடம்பெற்ற முறைக்கெடுகளை எதிர்த்தும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், வைத்தியர் அர்ச்சுனா பேச்சுவார்த்தைக்காக கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிய பதில் அத்தியட்சகராக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் நியமிக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை கிளப்பியுள்ளது.