விஜய் இரட்டை வேடங்களில் நடித்து மிகப்பெரிய ஹிட் ஆன படம் கத்தி. இதில் ஜீவானந்தம் மற்றும் கத்தி என்கிற கதிரேசன் ஆகிய இரண்டு ரோல்களில் விஜய் நடித்து இருப்பார்.
சிறையில் இருந்து தப்பி வருபவர் கதிரேசன், மறுபுறம் தனது கிராமத்திற்காக போராடி வருபவர் ஜீவானந்தம். படத்தில் ஜீவானந்தம் இடத்தில் இருந்து அந்த கிராமத்து பிரச்னையை கதிரேசன் தீர்த்து வைப்பார்.
இறுதியில் ‘யார் பெற்ற மகனோ’ என்ற பாடல் உடன் படம் நிறைவு பெற்று இருக்கும். அதில் கதிரேசனை போலீசார் வந்து கைது அழைத்து செல்வார்கள்.

மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்
முதலில் கத்தி கிளைமாக்சில் தான் வைத்திருந்த காட்சி வேறு என முருகதாஸ் கூறி இருக்கிறார்.
“படம் தொடங்கும்போது சதீஷ் டிவியில் ஜோதிட நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருப்பார், அப்போது விஜய் என்ட்ரி கொடுப்பார். அதே போல கிளைமாக்சில் சமந்தா டிவியில் ஜோதிட நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருக்க காலிங் பெல் அடிக்கும். விஜய் என்ட்ரி கொடுப்பார். அதன் பின் rolling credits வரும்.”
“ஆனால் அந்த காட்சியை நான் நீக்கிவிட்டேன். யார் பெற்ற மகனோ பாடல் பெரிய ஹிட் ஆனது, அதனால் அதோடு படத்தை முடித்துவிட்டேன்” என முருகதாஸ் கூறி இருக்கிறார்.


