யாழ். (Jaffna) மாவட்டத்திற்கான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (12) நடைபெற்றுள்ளது.
இதன்போது, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் தினேஷ் குணவர்தனவும் கலந்து கொண்டுள்ளார்.
பலரின் பங்கேற்பு
மேலும், குறித்த கூட்டத்தில், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே சிவஞானம், பிரதேச செயலாளர்கள், இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.