போக்குவரத்து சேவைகளை அத்தியவசிய சேவையாக்கும் அசாதாரண வர்த்தமானி அறிவிப்பை அதிபர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் வெளியிட்டுள்ளார்.
தொடருந்து பாதைகளின் போக்குவரத்து சேவைகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல் மிகவும் சிறப்பான சேவைகள் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசேட வர்த்தமானி
முன்னதாக, போக்குவரத்து சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவிப்பை அதிபர் வெளியிட்டிருந்த நிலையில், புதிய வர்த்தமானி அறிவித்தல் நேற்று(13) வெளியிடப்பட்டது.