அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கு உலகின் பெரும் பணக்காரரும் எக்ஸ் (X) நிறுவன தலைவருமான எலோன் மஸ்க் (Elon Musk) கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவருடைய எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட பதிவிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ”டொனால்ட் ட்ரம்பிற்கு எனது முழு ஆதரவை அளிக்கிறேன். அவர் உடனடியாக உடல் நலம் தேற வேண்டும்.
தாக்குதலுக்கு காரணமானவர்கள் பதவி விலகுதல்
இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று உளவுத்துறையின் தலைவரும், இந்த கூட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டவரும் பதவி விலக வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
I fully endorse President Trump and hope for his rapid recovery pic.twitter.com/ZdxkF63EqF
— Elon Musk (@elonmusk) July 13, 2024
அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில் குடியரசு கட்சி வேட்பாளராக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் களமிறங்கியுள்ளார்.
பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ட்ரம்ப் பங்கேற்று பிரசாரத்தில் ஈடுபட்ட போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.