முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேர்தலைப் பிற்போடுவதற்கு சதி செய்யப்படுகின்றது: சுமந்திரன் ஆதங்கம்

தேவையில்லாத ஒரு திருத்தத்தை வேண்டுமென்றே கொண்டு வந்து, மக்கள்
மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தித் தேர்தலைப் பிற்போடுவதற்கான ஒரு சதி
செய்யப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

வவுனியாவில், நேற்று (14) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், தமிழரசுக் கட்சியின்(
Ilankai Tamil Arasu Kachchi) அரசியல் குழுவும், கட்சி சம்பந்தமான வழக்கில்
சம்பந்தப்பட்ட தரப்பினரும் ஒன்றாகக் கூடி அடுத்த தவணை 19 ஆம் திகதி வழக்கு
வரவிருக்கின்ற காரணத்தால் அது குறித்து உரையாடினோம்.

 எம்.ஏ.சுமந்திரன் 

நாங்கள் ஒவ்வொருவரும்
எங்களெங்களது நிலைப்பாட்டுக்கு அமைய மறுமொழிகளை தாக்கல் செய்த பிறகு வழக்கை
முடிவுறுத்துவதற்கான ஒரு யோசனை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

தேர்தலைப் பிற்போடுவதற்கு சதி செய்யப்படுகின்றது: சுமந்திரன் ஆதங்கம் | Itak Case And Election About Sumanthiran

அந்த யோசனையின் விவரங்களை நாங்கள் மத்திய செயற்குழுவில் கூடி தீர்மானிப்போம்.
ஆனால், பொதுவாக வழக்கை எந்த அடிப்படையில் முடிவுறுத்தலாம் என்பது
இணங்கப்பட்டிருக்கின்றது.

முன்னேற்றகரமான செயற்பாடு கலந்துரையாடலில்
இடம்பெற்றது.

எதிர்வரும் 19 ஆம் திகதி மறுமொழி வழங்கிய பின்னர் ஒரு திகதியைத் தீர்மானித்து
கலந்துரையாடலை மேற்கொண்டு வழக்கை என்ன மாதிரி முடிவுறுத்தலாம் என்ற
தீர்மானத்துக்கு வரலாம்.

தமிழரசுக் கட்சி 

அதற்கு முன்னர் மத்திய செயற்குழு கூடி எடுக்கப்போகும்
தீர்மானம் தொடர்பாகக் கலந்துரையாடி இணக்கப்பாட்டைத் தெரிவிக்கும்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி உயிர்ப்போடு இருப்பதுடன் ஓர் ஆக்கபூர்வமான
பிரதிநிதிகளுடன் தொடர்ந்தும் பயணிக்கின்றது.

தேர்தலைப் பிற்போடுவதற்கு சதி செய்யப்படுகின்றது: சுமந்திரன் ஆதங்கம் | Itak Case And Election About Sumanthiran

எதிர்வரும் எந்தத் தேர்தலில்
கட்சி போட்டியிடும். மக்களுக்கான தனது செயற்பாட்டைத் தொடர்ந்தும்
முன்னெடுக்கும்.

அத்தோடு, ‘வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதன் காரணத்தால் தமிழரசுக் கட்சி
செயற்பட முடியாமல் இருக்கின்றது, நீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கின்றது,
கட்சியினுடைய சின்னத்தைப் பாவிக்க முடியாமல் இருக்கின்றது.

அதிபர் தேர்தல் தொடர்பில் மனுவை சட்டத்தரணி ஒருவர் தாக்கல் செய்யதுள்ளார்.
அது மூன்று நீதியரசர்கள் முன்பாக விசாரணைக்கு வருகின்றது. ஏற்கனவே கடந்த
திங்கட்கிழமையும் அப்படியான மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

தேவையில்லாத  திருத்தம்

5 நீதியரசர்கள்
குழு முன்னிலையில் நடந்தது. அந்த வழக்கில் நானும் முன்னிலையாகினேன். அது
அடிப்படையில்லாத மனு எனத் தெரிவித்து அதனைத் தாக்கல் செய்தவருக்கு ஒரு இலட்சம்
ரூபா வழக்குச் செலவும் செலுத்தும்படி உத்தரவிடப்பட்டது.

தேர்தலைப் பிற்போடுவதற்கு சதி செய்யப்படுகின்றது: சுமந்திரன் ஆதங்கம் | Itak Case And Election About Sumanthiran

வழக்கு நிலுவையில்
உள்ளபோது அதனைப் பற்றிப் பேசக்கூடாது.

அரசு தேர்தலை பிற்போட முனைப்புக் காட்டுகின்றது என்பதை அரசமைப்பில் 83 (பி)
என்கின்ற உறுப்புரையை மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி கொடுத்ததில் இருந்தே
தெரிகின்றது. அதைப் பற்றி விளக்கமாகவும் விவரமாகவும் நாடாளுமன்றத்தில்
பேசியுள்ளேன்.

தேவையில்லாத ஒரு திருத்தத்தை வேண்டுமென்றே கொண்டு வந்து, மக்கள்
மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தித் தேர்தலைப் பிற்போடுவதற்கான ஒரு சதி
செய்யப்படுகின்றது.” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.