மதங்களிடையே பௌத்த மதமே பாரிய அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருவதாக பௌத்த சாசன மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க(Vidura Wickramanayaka) தெரிவித்துள்ளார்.
பௌத்த மதம் எதிர்நோக்கி வரும் அச்சுறுத்தல்களை தடுக்க விசேட செயற் திட்டமொன்று உருவாக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
விசேட திட்டம்
நாட்டின் கலாச்சாரத்தை பாதுகாப்பதற்காக விசேட திட்டமொன்றை தயாரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இதற்கான முயற்சி மேற்கொண்ட போதிலும் பல்வேறு காரணிகளினால் அது கைகூடவில்லை என அமைச்சர் விதுர விக்ரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.