முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எதிர்காலத்தை பிரகாசமாக்கும் தீர்மானம்

நிலாவை காட்டி சோறு ஊட்டிய காலம் மாறி நிலாவிற்கு செயற்கை நுண்ணறிவோடு கொண்ட விண்கலன்களை அனுப்பி ஆய்வு செய்யும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ச்சி பெற்று உள்ளது.

மனித சமூகம் அசுர வேகத்தில் தொழில்நுட்பத் துறையில் முன்னேற்றத்தை பதிவு செய்து வருகின்றது. கடந்த காலங்களை போன்று அல்லாது உலகின் தொழில்துறைகளும் தொழிற்கல்வி நிறுவனங்களும் புதுப்பொலிவை பெற்றுக் கொண்டுள்ளன.

சைபர் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, ரோபோ தொழில்நுட்ப பொறியியல் என பல்வேறு புதிய தொழில் வாய்ப்புகள் தினந்தோறும் அறிமுகமாகி வருகின்றது.

மருத்துவர்கள் – பொறியியலாளர்கள் 

அடுத்த ஓரிரு தசாப்தங்களில் உலகின் ஒட்டுமொத்த ஆதிக்கத்தையும் தகவல் தொழில்நுட்பத்துறை தன் வசம் கொண்டிருக்கும் என்றால் அது மிகைப்பட போவதில்லை.

அந்த வகையில் இலங்கையில் தொழில் சார் கற்கை நெறிகளுக்கு முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் விரவி வருகின்றது.

எதிர்காலத்தை பிரகாசமாக்கும் தீர்மானம் | Northern Uni Supports Domestic Science Development

மருத்துவர்கள் பொறியியலாளர்கள் என சில அடிப்படை தொழில்துறைகளுக்கு வரையறுக்கப்பட்டிருந்த சமூகம் இன்று வானியல் ஆய்வாளர், சைபர் தொழில்நுட்ப பொறியியலாளர், தரவு விஞ்ஞானி ரோபோ பொறியியலாளர் என பல்வேறு தொழிற்துறைகளில் சந்தர்ப்பங்கள் உருவாகியுள்ளன.

அதேவிதமாக தனியார் உயர் கல்வி நிறுவனங்களிலும் அபரிமிதமான வளர்ச்சியை காணக்கூடியதாக உள்ளது.

வடக்கு கிழக்கு வாழ் இளைஞர் யுவதிகளுக்கு ஓர் பொக்கிஷமாக நோர்தன் யுனிவர்சிட்டியை குறிப்பிட முடியும்.
வடக்கு வாழ் மக்கள் பெரும்பாலும் புலம்பெயர் சமூகத்துடனான உறவுகளை வலுவாக பேணக்கூடிய ஒரு சமூகமாகும்.

நவீன தொழில்துறைகளில் நிபுணத்துவம்

சமூக மாற்றம் என்பதற்கு அப்பால் சமூக மேம்பாடு, சமூகத்தை வலுவூட்டுவதற்கு அந்த சமூகம் நவீன தொழில்துறைகளில் நிபுணத்துவம் வகிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

எதிர்காலத்தை பிரகாசமாக்கும் தீர்மானம் | Northern Uni Supports Domestic Science Development

அவ்வாறான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் ஓரே ஓர் சிறந்த களமாக நோர்தன் யூனிவர்சிட்டி அமைந்துள்ளது. புலம்பெயர் உறவுகள் தங்களது சொந்தங்களுக்கு செய்யக்கூடிய மிகச்சிறந்த முதலீடாக இந்த கல்வி கற்கை நெறிகளுக்கான உதவி அமைகின்றது.

மேலும் புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் குறைந்த செலவில் இந்த உயர்கல்வி நிறுவனத்தில் சிறந்த பயனைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தற்பொழுது நோர்தன் யுனியில் கணனி வர்த்தகம் ஆகிய இரண்டு பிரதான பிரிவுகளில் கற்கை நெறிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கணினி பிரிவில் சொப்ட்வேர் இன்ஜினியரிங், இன்ஃபர்மேஷன் டெக்னொலஜி, டேட்டா சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி, கம்ப்யூட்டர் சிஸ்டம் அண்ட் நெட்வொர்க் இன்ஜினியரிங், இன்டர்ராக்டிவ் மீடியா, இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் போன்ற கற்கை நெறிகள் கற்பிக்கப்படுகின்றன.(Software Engineering, Information Technology, Data Science, Cyber ​​Security, Computer System and Network Engineering, Interactive Media, Information Systems Engineering are taught in the Computer Department.)

விசேட வங்கிக்கடன்

அதேபோல் வணிக பிரிவில் கணக்கியல் மற்றும் நிதியியல், ஏற்பட்டியல் மற்றும் விநியோக சங்கிலி முகாமைத்துவம், சந்தைப்படுத்தல் முகாமைத்துவம் போன்ற கற்கை நெறிகள் நோர்தன் யூனியில் கற்பிக்கப்படுகின்றன.

இலங்கையின் புகழ் பூத்த மிகவும் தகுதியான விரிவுரையாளர்களை கொண்டு அமைந்த குழு ஒன்று நோர்தன் யுனிவர்சிட்டியில் கற்கை நெறிகளை கற்பித்து வருகின்றனர்.

எதிர்காலத்தை பிரகாசமாக்கும் தீர்மானம் | Northern Uni Supports Domestic Science Development

வசதி குறைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கட்டணங்களை செலுத்துவதற்காக சில விசேட திட்டங்களை இந்த நோர்தன் யுனிவர்சிட்டி அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பாக கட்டணம் செலுத்துவதில் இடர்பாடுகளை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு விசேட வங்கிக்கடன் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகச் சிறந்த கற்றல் சூழலை கொண்ட இந்த உயர்கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் சிறந்த பலன்களை பெற்றுக் கொள்ளக்கூடிய சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

எனவே இவ்வாறான ஓர் சந்தர்ப்பத்தை நழுவ விடாது பெற்றோரும் மாணவர்களும் சரியான தீர்மானங்களை எடுப்பது எதிர்காலத்தை பிரகாசமாக்கும் என்பதில் ஐயமில்லை.

To apply – https://northernuni.lk/application-form/

மேலும் தகவல்களுக்கு :- 0771471471 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.