மாஸ்க்
நடிகர் கவின் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். சின்னத்திரையில் இருந்து வந்து தற்போது வெள்ளித்திரையில் கலக்கிக்கொண்டிருக்கும் கவின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் மாஸ்க்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்க நடிகை ஆண்ட்ரியா வில்லியாக நடித்திருந்தார். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

பிரபல நடிகை வினுஷா நடிக்கும் புத்தம் புதிய சீரியல் சுட்டும் விழி சுடரே… புரொமோ இதோ
வசூல்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. இதனால் இப்படத்திற்கு பாக்ஸ் ஆபிஸிலும் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், 5 நாட்களை கடந்திருக்கும் மாஸ்க் படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மாஸ்க் படம் உலகளவில் 5 நாட்களில் ரூ. 7 கோடி வசூல் செய்துள்ளது.

