சமயங்களில் பௌத்தம் தான் அதிகம் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகுகிறது என புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க (Vidura Wickremanayake) தெரிவித்துள்ளார்.
இதனால் பௌத்த மதத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
விசேட வேலைத்திட்டம்
அத்துடன், நாட்டின் கலாசாரத்தை பாதுகாக்கும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க கூறியுள்ளார்.
கடந்த 2 வருடங்களாக அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பல்வேறு காரணங்களால் அது வீண் போனதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.