முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து இதுவரை 52 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்றுடன் (16) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதி அடையாளம் காணப்பட்ட நிலையில் மூன்று கட்டங்களாக அகழ்வு
பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் இரண்டு கட்டங்களின் போது 40 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் மூன்றாம்
கட்ட அகழ்வு கடந்த 04.07.2024 அன்று ஆரம்பமாகியதில் இருந்து 15.07.2024 வரை 12 மனித
எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அகழ்வு பணிகள்
இந்த நிலையில் மனிதபுதைகுழி இன்றுடன் தற்காலிகமாக மூடப்பட்டு அகழ்வு பணிகள்
நிறைவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன் தலைமையில் கண்காணிக்கப்பட்டு அகழ்வு
பணிகள் நிறைவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இதன்போது, 52 மனித எச்சங்களுடன் சான்று பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. தொல்பொருள் பேராசிரியர் ராஜ்சோமதேவ மற்றும் ஸ்கான் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் இந்த மனிதப்புதைகுழி மேலும் நீடிப்பதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை என்ற நிலையில் நீதிமன்ற அனுமதியுடன் பகுதியவில் மூடப்பட்டுள்ளது.
சாத்திய கூறுகள்
இதற்கமைய, இன்னும் ஒருசில தினங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பணியகத்தினை சேர்ந்த
அதிகாரிகள் பார்வையிட்டு முற்றுமுழுதாக இந்த மனித புதைகுழிகளை மூடுவார்கள் என
முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வசுதேவா தெரிவித்துள்ளார்.
குறித்த மனித புதைகுழியை மூடும் போது நிலத்தில் குற்றவியல் பிரதேசம் என்ற
எச்சரிக்கை துண்டு வழக்கு எண் ஏ.ஆர் 804/ 2024 என்றும், குற்றவியல் நீதிமன்றம்
முல்லைத்தீவு 2023-2024இற்கு இடையில் தோண்டப்பட்டது என்றும் எழுதப்பட்ட, மண்ணுள் பிரிகை அடைய முடியாத இறப்பர் சேர்க்கப்பட்டு மூடப்படவுள்ளது.
இறுதி நாளான இன்று சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவா, பேராசிரியர் றாஜ்சோமதேவா, காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி நிரஞ்சன், நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொக்கிளாய் பகுதி கிராம அலுவலகர் ஆகியோர் முன்னிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.