முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நெதன்யாகுவை கைது செய்ய தயாராகும் கனடா: ட்ரூடோ வழங்கிய உறுதி!

மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரமடையும் நிலையில், சர்வதேச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி நெதன்யாகுவை கைது செய்ய  தயாராக உள்ளதாக அந்நாட்டு பிரதமர்
ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) உறுதிப்படுத்தியுள்ளார்.

அண்மையில், பிரித்தானியா சர்வதேச நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொண்டு நெதன்யாகு பிரித்தானியா வந்தால் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது என தெரிவித்திருந்தது.

இதையடுத்து, இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) விதித்த கைது உத்தரவை மேற்கொண்டு, அவர் கனடாவுக்கு வந்தால் கைது செய்ய தயாராக இருப்பதாக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு

இந்த விடயம் தொடர்பில் ட்ரூடோ கூறுகையில், “சர்வதேச சட்டங்களுக்கு நாம் மதிப்பு அளிக்கிறோம் மற்றும் நீதிமன்றங்களின் உத்தரவுகளை பின்பற்றுகிறோம். இது கனடியர்களின் அடையாளம்.

நெதன்யாகுவை கைது செய்ய தயாராகும் கனடா: ட்ரூடோ வழங்கிய உறுதி! | Trudeau Confirms Canada Will Arrest Netanyahu

இந்த கைது உத்தரவு, கடந்த 2023 அக்டோபர் 7ஆம் திகதி அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலின் நடவடிக்கைகளால் உருவான மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்களுக்காக விதிக்கப்பட்டதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்தது.

முன்னதாக, பிரித்தானியா உத்தரவை ஏற்றுக்கொண்டு, நெதன்யாகு பிரித்தானியா வந்தால் கைது செய்யப்படும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்தது.

பிரித்தானியாவின் தீர்மானம்

எனினும், பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மர் அதனை நேரடியாக உறுதிப்படுத்தாமல், ‘சர்வதேச சட்டங்களை பின்பற்றுவது பிரித்தானியாவின் கடமையாகும்’என்று கூறினார்.

இதேவேளை, மற்ற பல நாடுகளும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டுள்ளன, அதன்படி, பெல்ஜியம், பிரான்ஸ், நோர்வே, சுவிட்சர்லாந்து, மற்றும் துருக்கி உட்பட 15 நாடுகள் உள்ளன.

நெதன்யாகுவை கைது செய்ய தயாராகும் கனடா: ட்ரூடோ வழங்கிய உறுதி! | Trudeau Confirms Canada Will Arrest Netanyahu

ஆனால், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் ஐ.சி.சியின் இந்த நடவடிக்கைக்கு எதிராகத் தங்களின் பார்வையை வெளிப்படுத்தின.

அதேநேரம், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், “இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையில் ஒப்பீடு செய்ய முடியாது, இஸ்ரேலின் பாதுகாப்பை ஆதரிக்கிறோம்” என்று உறுதியாகக் கூறியுள்ளார்.

மேலும், சிறுபான்மையான நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை ஆதரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.