கிளப் வசந்தவின் கொலையின் பின்னர் கஞ்சிபானி இம்ரான் இத்தாலியில் (Italy) நடத்திய விருந்தில், கொழும்பு (Colombo) குற்றத்தடுப்பு பிரிவில் பணியாற்றிய முன்னாள் காவல்துறை பரிசோதகர் ஒருவர் இருப்பதாக நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் பணிப்புரிந்து தற்போது பிரான்ஸில் வசித்து வரும் துமிந்த ஜயதிலக்க என்ற அதிகாரி மீதே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
எனினும், துமிந்த ஜயதிலக்க பிரான்ஸில் (France) இணையத்தளமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இந்த குற்றசாட்டை மறுத்துள்ளார்.
இலங்கை அரசாங்கம்
மேலும், இந்த செய்தியை வெளியிட்ட ஊடகவியலாளரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், ஆனால் அவர் தனது தொலைபேசி அழைப்புக்களை புறக்கணித்ததாகவும் கூறியுள்ளார்.
கிளப் வசந்தவை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மற்றும் துலானின் தாயார் பற்றிய சமீபத்திய காவல்துறை வெளிப்பாடுகள், இம்ரானுடன் விருந்துக்கு சென்றவர்களின் புகைப்படங்கள் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும் என குறித்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளது அறியக்கிடைத்துள்ளதாகவும் துமிந்த ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தான் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிரான்ஸுக்கு வந்ததாகவும், தனக்கான அதிகாரங்களை மீண்டும் இலங்கை அரசாங்கம் தந்துதவினால் கஞ்சிபானி இம்ரானை கைது செய்து நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவேன் எனவும் கூறியுள்ளார்.