பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு போதியளவு பணமில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்குழுக் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு நேற்றையதினம் (22.07.2024) நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதியளவு பணமில்லை
பொதுத் தேர்தல் குறித்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் கூறி வருவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
எனினும், பொதுத் தேர்தல் நடாத்துவதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் நடாத்துவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் பத்து பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.