எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு என் மனதில் கொண்டுள்ள வேட்பாளர் தொடர்பில் இப்போது அறிவிக்க முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இறுதி தீர்மானம்
இன்றையதினம் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு பல பெயர்கள் பொதுன பெரமுனவிற்குள் இருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளரே வெற்றிபெறக் கூடிய நிலையில் இருப்பதாகவும், தான் மனதில் கொண்டுள்ள வேட்பாளர் தொடர்பில் இப்போது அறிவிக்க முடியாது என்றும் மகிந்த ராஜபக்ச இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.