முன்னணி இசையமைப்பாளரின் இளம் வயது போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மரகத நாணயம், கனா, சித்தா போன்ற பல படங்களுக்கு இசையமைத்தவர் திபு நினான் தாமஸ். அவர் இளம் வயதில் இசையமைப்பார் சந்தோஷ் நாராயணன் உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அது தான் தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
என் வழிகாட்டி
சந்தோஷ் நாராயணன் பற்றி பேசி இருக்கும் அவர். “என் வழிகாட்டி சந்தோஷ் நாராயணனுக்கு பெரிய நன்றி. அவர் எனது பயணத்தில் பெரிய inspiration ஆக இருந்திருக்கிறார். இசையமைப்பில் இருக்கும் அடிப்படை விஷயங்களை சொல்லி கொடுத்தது மட்டுமின்றி, அதில் இருக்கும் நுணுக்கங்களையும் சொல்லி கொடுத்தார்.”
“அவரது வழிகாட்டுதல் எனக்கு மதிப்புமிக்கது” என திபு நினான் தாமஸ் கூறி இருக்கிறார்.