ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கை முன்னாள் இராணுவ வீரர்கள் உக்ரைன் (Ukraine) அதிகாரிகளால் போர்க் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
போரில் எல்லை தாண்டிய குற்றத்தின் பேரில் ஐந்து இலங்கையர்கள் போர்க் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் உக்ரேனியப் படைகளுடன் போரிட்ட மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் இலங்கை தூதரகத்திற்குத் தெரிவித்துள்ளனர்.
ஓய்வுபெற்ற இலங்கை இராணுவத்தினர்
முன்னதாக, ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்களை விடுவிப்பதற்காக இலங்கையில் இருந்து அமைச்சர்கள் குழு மொஸ்கோவிற்கு விஜயம் செய்தது.
பெரும்பாலும் ஓய்வுபெற்ற இலங்கை இராணுவத்தினர், ரஷ்ய குடியுரிமை, அதிக சம்பளம் மற்றும் சலுகைகளை வழங்குவதாக வாக்குறுதியளித்து ரஷ்யாவிற்கு பயணமாக ஏமாற்றப்பட்டுள்ளனர் என இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அவர்கள் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும், இதனால் அவர்களை விடுவிக்க கடினமாக உள்ளதுடன் சிலர் ரஷ்ய குடியுரிமை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.