முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வாக்குகளுக்காக இலஞ்சம் வழங்கும் அரசியல் பிரதிநிதிகள் : எழுந்துள்ள குற்றச்சாட்டு

தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக அரசியல் பிரதிநிதிகள் சிலர் மக்களுக்கு இலஞ்சம் வழங்குவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி நிலவும் இந்தக் காலக்கட்டத்திலும் பிளாஸ்ட்டிக் கதிரைகள், கோழிக்குஞ்சுகள், பாடசாலை உபகரணங்கள் மக்களுக்கு வழங்கப்படுவதாக தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு இயக்கம் (PAFFEL) அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி (Rohana Hettiarachchi) சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தவகையில், தேர்தலை நோக்காகக் கொண்டு நாடளாவிய ரீதியில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இது குறித்து மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல்

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 84 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலானவை அதிகாரம் மற்றும் சொத்துகளை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டுக்களென அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குகளுக்காக இலஞ்சம் வழங்கும் அரசியல் பிரதிநிதிகள் : எழுந்துள்ள குற்றச்சாட்டு | Election Bribes Politicians Accused Paffrel Say

இந்தநிலையில், தேர்தல் சட்டங்களை மீறியதாக இதுவரை 44 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க (Manjula Gajanayake) தெரவித்துள்ளார்.

குறிப்பாக, தேர்தல் இலஞ்சமாக பல்வேறு பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படுவதாக கடந்த 09 ஆம் திகதியிலிருந்து முறைப்பாடுகள் கிடைத்த வண்ணமுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

காவல்துறை விசாரணை

இதனிடையே, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான  காவல்துறை விசாரணைப் பிரிவில் 09 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாவும், இவற்றில் தேர்தல் சட்டங்களை மீறியதாக 04 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 05 முறைப்பாடுகளும் தமக்கு கிடைத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வாக்குகளுக்காக இலஞ்சம் வழங்கும் அரசியல் பிரதிநிதிகள் : எழுந்துள்ள குற்றச்சாட்டு | Election Bribes Politicians Accused Paffrel Say

மேலும், கடந்த ஜூலை 31 ஆம் திகதி முதல் நேற்று (12) வரை நாடளாவிய ரீதியில் தேர்தல் சட்டங்களை மீறிய 320 செயற்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அவற்றில் 103 முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைபாட்டு முகாமைத்துவ நிலையத்திலும் 214 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திலும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.