பலஸ்தீனம் (Palestine) மீதான இஸ்ரேலின் தாக்குதல் சமீப காலமாக தீவிரமடைந்துள்ள நிலையில், போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்து பிரித்தானியா (United Kingdom), பிரான்ஸ் (France) மற்றும் ஜெர்மனி (Germany) கூட்டாக அறிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு முதல் பலஸ்தீனத்தின் காசா (Gaza) பகுதி இஸ்ரேலிய (Israel) இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் (Hamas) எனும் பலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ம் திகதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
போர் நிறுத்தம்
போரில் இதுவரை 39,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்து பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி கூட்டாக அறிக்கை விடுத்துள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், ஜெர்மன் ஜனாதிபதி ஓலாஃப் ஷோல்ஸ் மற்றும் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர் கூட்டாக இந்த அறிக்கையை விடுத்துள்ளனர்.
ஐநாவின் தீர்மானங்கள்
குறித்த அறிக்கையில், “சண்டை முடிவுக்கு வர வேண்டும். ஹமாஸால் பிடித்து வைத்திருக்கும் அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்க வேண்டும்.
காசா மக்களுக்கு அவசர உதவிகள் தேவை. அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
தொடக்க காலங்களில், போர் நிறுத்தம் தொடர்பாக ஐநாவில் தீர்மானங்கள் கொண்டுவரப்படும்போது அதற்கு எதிராக இந்த நாடுகள் வாக்களித்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.