காசாவில் பிறந்து நான்கு நாட்களேயான இரட்டைக்குழந்தைகள் மற்றும் தாய், பாட்டி ஆகியோர் இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த குழந்தைகளின் பிறப்பைப் பதிவு செய்வதற்காக தந்தை உள்ளூர் அரசாங்க அலுவலகத்தில் இருந்தபோது இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் இவர்கள் நால்வரும் கொல்லப்பட்டனர்.
பிறப்புச்சான்றிதழ் பெறச் சென்ற தந்தை
அஸ்ஸர் என்ற ஆண் குழந்தையும், அய்செல் என்ற பெண் குழந்தையும் பிறந்து நான்கு நாட்களே ஆன நிலையில், அவர்களது தந்தை மொகமட் அபு அல் கும்சன் அவர்களின் பிறப்புச் சான்றிதழைப் பெறச் சென்றார்.
அவர் அலுவலகத்தில் இருந்தபோது, அவரது அயலவர்கள் அவரது வீட்டின் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.
“என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை,” என்று அவர் கூறினார்.
மகிழ்ச்சியாக இருக்க எனக்கு நேரம் இல்லை
“அது வீட்டைத் தாக்கிய ஷெல் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.”
“அவர்களுட்ன் மகிழ்ச்சியாக இருக்க எனக்கு நேரம் இல்லை,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
காசாவின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம், போரின் போது 115 குழந்தைகள் பிறந்து பின்னர் கொல்லப்பட்டதாகக் கூறுகிறது.
காசாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சக தகவலின்படி, இஸ்ரேலிய தாக்குதலில் 39,790 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
https://www.youtube.com/embed/j_4J1zLv22Q