மாற்றுத்திறனாளிகள் தமக்கு வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டையை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு பயன்படுத்த முடியும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் வாக்காளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த தேவையான விடயங்கள் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடையாள அட்டை
“செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் அல்லது செல்லுபடியாகும் விமான அனுமதிப்பத்திரம், சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட முதியோர் அடையாள அட்டை, ஓய்வூதியத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஓய்வூதியம் பெறுபவரின் அடையாள அட்டை. மேலும், திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வணக்கத்திற்குரிய குருமார்கள் அடையாள அட்டை, எதுவுமே இல்லாதவர்கள் தங்கள் கிராம அலுவலருடன் தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று தற்காலிக அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், இம்முறை தற்காலிக அடையாள அட்டையை வழங்கியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகள் அந்த தற்காலிக அடையாள அட்டையைப் பெறுவதற்கான திறனைக் கொண்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.