முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணிலின் நாடகத்தை தமிழ் மக்கள் நம்ப மாட்டார்கள்: தேசிய மக்கள் சக்தி விசனம்

தமிழ் மக்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்தை ஆட்சிக்கு வந்தபின் பெற்று
தருவதாக கூறும் ரணில் விக்ரமசிங்கவின் நாடகத்தை தமிழ் மக்கள் நம்ப
மாட்டார்கள் என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம்
சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் அவரது கட்சி அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து
தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போது ஜனாதிபதி தேர்தலில் 22 அரசியல் கட்சிகள்
மற்றும் 17 சுயேச்சைக் குழு வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கு தகுதி
பெற்றுள்ளனர்.

சுயேச்சை குழு

அனேகமாக சுயேச்சை குழு வேட்பாளராக களம் இறங்கியவர்கள் ரணில் விக்ரமசிங்கவின்
நிகழ்ச்சி நிரலில் களமிறங்கியவர்கள்.

தேசிய மக்கள் சக்தி தமிழ் சிங்கள முஸ்லிம் மலையக மக்களை
பிரதிநிதித்துவப்படுத்தி நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்காக
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளது.

ரணிலின் நாடகத்தை தமிழ் மக்கள் நம்ப மாட்டார்கள்: தேசிய மக்கள் சக்தி விசனம் | Tamil People Will Not Believe Ranil S Play

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரவுக்கு அனைவருடைய ஆதரவும்
பெருகிவரும் நிலையில் அதனை சகித்துக் கொள்ள முடியாத ஏனைய கட்சிகள் பொய்
பிரசாரங்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன.

இவ்வாறான ஒரு நிலையில் ரணில் விக்கிரமசிங்க தமிழ் கட்சிகளை சந்தித்து பொலிஸ்
மற்றும் காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவது தொடர்பில் தான் கரிசனையாக
உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

ரணில் விக்ரமசிங்க 

ரணில் விக்ரமசிங்க 41 வருட காலமாக நாடாளுமன்றத்தில் உள்ள நிலையில் ஆறு
தடவைக்கு மேலாக எதிர்க்கட்சி தலைவராகவும் பிரதமர் மற்றும் தற்போது ஜனாதிபதியாக
உள்ளார்.

ரணிலின் நாடகத்தை தமிழ் மக்கள் நம்ப மாட்டார்கள்: தேசிய மக்கள் சக்தி விசனம் | Tamil People Will Not Believe Ranil S Play

தமிழ் மக்களுக்கு காணி போலீஸ அதிகாரத்தை வழங்க வேண்டுமானால் தனது விசேட
அதிகாரத்தை பயன்படுத்தி வழங்கியிருக்க முடியும் ஏன் மீண்டும் ஜனாதிபதி ஆகிய
பின்னர் வழங்கப் போவதாக கூறுகிறார்” என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.