Courtesy: Sivaa Mayuri
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள், அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தற்போது கூறுகின்ற சில கூற்றுக்கள் பொய்யானவை என்று கூறி அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பான பிரச்சினை நீதிமன்றில் ஆராயப்பட்டு வருவதாகவும், கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் இன்னும் உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சஜித்துக்கு ஆதரவு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பின் அடிப்படையில், கட்சித் தலைவருக்கு முடிவுகளை எடுப்பதற்கு அதிகாரம் உள்ளது என்றும் மைத்திரிபால குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆதரவை வழங்கவுள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அண்மையில் வெளியான கூற்றுக்களை அடுத்தே, குறித்த அறிக்கையை மைத்திரிபால வெளியிட்டுள்ளார்.