முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உக்ரைனுக்கு உதவிய பெண் ரஷ்ய நடன கலைஞர் : 12 ஆண்டுகள் சிறையில் அடைப்பு

உக்ரைனை(ukraine) ஆதரிக்கும் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு $51 டொலர் நன்கொடையாக வழங்கிய குற்றச்சாட்டின் பேரில், நடனக் கலைஞர் க்சேனியா கரேலினுக்கு ரஷ்ய(russia) நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

கரேலின் ஒரு அமெரிக்க மற்றும் ரஷ்ய இரட்டை குடியுரிமை நடனக் கலைஞர் ஆவார்.

அமெரிக்க குடியுரிமை பெற்று 2021 முதல் லொஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வருகிறார். இந்த ஆண்டு ஜனவரியில், அவர் தனது குடும்ப உறுப்பினர்களை காண ரஷ்யா வந்தபோது, ​​​​ரஷ்ய அதிகாரிகள் கரேலினைக் கைது செய்து, அவர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்தனர்.

ரஷ்யாவிற்கு செய்த தேசத்துரோகம்

வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, ​​உக்ரைனை ஆதரிக்கும் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு பணத்தை நன்கொடையாக வழங்கியது ரஷ்யாவிற்கு செய்த தேசத்துரோகம் என்றும், நன்கொடை அளிக்கப்பட்ட பணத்தின் அளவு பொருத்தமற்றது என்றும் வழக்குத் தொடுத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

உக்ரைனுக்கு உதவிய பெண் ரஷ்ய நடன கலைஞர் : 12 ஆண்டுகள் சிறையில் அடைப்பு | Russian Dancer Helped Ukraine Jailed For 12 Years

இதன் விளைவாக, கரேலினுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று வழக்குத் தொடுத்த அதிகாரிகள் நீதிமன்றத்தை நாடினர்.

 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை 

வெளியாட்கள் பங்கேற்காமல் விசாரணை நடத்தப்பட்டதாகவும், க்சேனியா கரேலின் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

உக்ரைனுக்கு உதவிய பெண் ரஷ்ய நடன கலைஞர் : 12 ஆண்டுகள் சிறையில் அடைப்பு | Russian Dancer Helped Ukraine Jailed For 12 Years

குற்றத்தை ஒப்புக்கொண்டதால் நீதிமன்றம் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த அன்று கரேலினா தனது கைப்பேசியைப் பயன்படுத்தி உக்ரைனுக்காக 51.80 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக அளித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்