தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் சுமார் 25 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடி இருப்பவர் பி.சுசீலா. அவரது குரலுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.
அவரது பாடல்களை தற்போதும் ரசித்து கேட்டு வருகின்றனர் ரசிகர்கள்.
யுவன் ஷங்கர் ராஜா மீது போலீசில் புகார்! ரூ.20 லட்சம் வாடகை தராமல் ஏமாற்றினாரா?
மருத்துவமனையில் அனுமதி
தற்போது 88 வயதாகும் சுசீலா தற்போது திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
வயது முதிர்வு காரணமாக அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு இருப்பதாகவும் அதற்கு அவர் சிகிச்சை தற்போது பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.