முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வாக்காளர் ஒருவருக்கு 1000 ரூபா: கோரிக்கை விடுத்துள்ள பிரதான வேட்பாளர்கள்

ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை 1000 ரூபாவரை வழங்கப்பட வேண்டுமென பிரதான வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பான முன்மொழிவுகள் குறித்த இறுதித் தீர்மானம் எதிர்காலத்தில் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் செலவு ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, வேட்புமனுக்கள் பெறப்பட்ட 5 நாட்களுக்குள் ஒரு வாக்காளருக்குச் செலவிடப்படும் அங்கீகரிக்கப்பட்ட தொகை வர்த்தமானியில் வெளியிடல் குறித்து முடிவெடுப்பதற்காக வேட்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் தேர்தல்கள் ஆணைக்குழு வளாகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ரத்நாயக்க,

“நாட்டின் ஆட்சியாளரைத் தெரிவு செய்யும் பரிவர்த்தனை பணத்திற்கு விற்கக்கூடிய ஒன்றாக இருக்கக் கூடாது.

வாக்காளர் ஒருவருக்கு 1000 ரூபா: கோரிக்கை விடுத்துள்ள பிரதான வேட்பாளர்கள் | 1000 Rs Per Voter Precident Election Sl

தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் உள்ள விடயங்கள் ஆணைக்குழு எதிர்பார்த்தது போன்று நடக்கவில்லை. மேலும், வாக்காளர்கள் நுகர்வோராக மாறுவதற்கு இடமளிக்கக் கூடாது.” என்றார்.

தேர்தல் அறிக்கையை 

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்காக ஒவ்வொரு வேட்பாளரும் செலவிட்ட தொகை தொடர்பான அறிக்கையை தேர்தல் முடிவடைந்த 20 நாட்களுக்குள்  ஆணைக்குழுவிடம் வழங்குப்பட வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர் ஒருவருக்கு 1000 ரூபா: கோரிக்கை விடுத்துள்ள பிரதான வேட்பாளர்கள் | 1000 Rs Per Voter Precident Election Sl

இதற்கிடையில், இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக ஒரு வேட்பாளருக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உரிய நிறுவனத்திற்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

தேர்தல் காலத்தில் பல்வேறு நன்கொடைகள் செய்து வாக்களிக்க முயற்சிப்பதன் மூலம் வாக்காளர் அவமானப்படுத்தப்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.